புலம்பெயர் நாடுகளில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள்

மே 27, 2008

புலம்பெயர் நாடுகளில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகளின் படத்தொகுப்புக்கள் இங்குத் தொகுப்பட்டுள்ளன.

மெல்பேணில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

மொன்றியலில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

ரொறண்ரோவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

நோர்வே மோல்ட நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

நோர்வே பேர்கன் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

டென்மார்க் கொள்பக் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

நோர்வே உல்ஸ்ரைன்வீக்கில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

சுவிஸ் சூரிச் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

நெதர்லாந்தில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

கனடா ரொறன்ரோ ஸ்காபரோ நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

அவுஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

லண்டன் வடமேற்கில் நடைபெற்ற நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

யேர்மனி ஸ்ருட்காட், மன்கைம், நூறன்பேர்க் நகரங்களில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வுகளின் படத்தொகுப்பு

டென்மார்க் மிடில்பாட் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

நியூசிலாந்தில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

நோர்வே ஸ்ரவங்கர் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

யேர்மனி நெயஸ்ரட், கைல்புறேன், பிலபெல்ட், மூல்கைம் நகரங்களில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வு

பிரான்சில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

நோர்வேயில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

டென்மார்க் கேர்ணிங் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் ரொறன்ரோ மத்தி கலை பண்பாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

கனடா ஒன்ராறியோ மாநிலத்தின் ரொறன்ரோவில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

யேர்மனி பிராங்போட் மற்றும் லண்டோ நகரங்களில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வுகளின் படத்தொகுப்பு

கனடா ஒன்ராறியோ மாநிலத்தின் மிசுசாக்காவில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வின் படத்தொகுப்பு

நன்றி: தமிழ்நாதம்


பிரிகேடியர் பால்றாஜ் பற்றிய ஒளிப்பட ஆவணம்

மே 26, 2008

பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் பற்றி ஒளிப்பட ஆவணத்தைக் கீழுள்ள இணைப்பிற் சென்று பார்க்கவும்.

http://www.yarl.net/video/video_023.html

நன்றி: யாழ் இணையம்.


ஓயாத அலைகளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு

மே 24, 2008

ஓயாத அலைகள் – 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார்.

கேணல் ஆதவன் வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

குடாரப்பு தரையிறக்கத்தின் பின் இத்தாவிலில் எதிரியின் கோட்டைக்குள் படையணியை நிறுத்தி எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.

தமிழ்நாட்டில் 09 ஆவது பயிற்சிப் பாசறையில பயிற்சி எடுத்தபோது, அங்கும் பயிற்சிப்பாசறையின் அணித்தலைவராக இவர் செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டு இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல் காலப்பகுதியில் மணலாற்றில் மேஜர் பசீலனால்தான் பிரிகேடியர் பால்ராஜ் தமிழீழ தேசியத்லைவர் அவர்களுக்கு அறிமுகமாகின்றார்.

மேஜர் பசீலன் வீரச்சாவடைந்த பின்னர் வன்னி மாவட்டத் தளபதியாக பெறுப்பெடுத்து வன்னியில் ஏராளமான தாக்குதல்களை இந்தியப் படையினருக்கு எதிராக  நடத்தியவர் அவர்.

2 ஆம் ஈழப்போரில் மாங்குளம் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் வெற்றியின் பின்னணியில் பிரிகேடியர் பால்ராஜ் செயற்பட்டார்.

ஜெயசிக்குறு எதிர்ச் சமரில் நெடுங்கேணிப் பகுதியில் நின்று எதிரிக்கு பாடம் புகட்டியவர்.

ஓயாத அலைகள் – 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது.

வடபோர் முனையில் ஓயாத அலைகள – 03 அடிக்கும் போது குடாரப்பு ஊடாக தரையிறங்கி எதிரிக்கு பலத்த அதிர்ச்சியையும் இழப்பினையும் கொடுத்தவர் பிரிகேடியர் பால்ராஜ். எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தார்.

ஆனையிறவு வெற்றிக்கு காரணமாக பிரிகேடியர் பால்ராஜின் குடாபரப்பு ஊடறுப்பு தாக்குதல் இருந்தது. அந்த வெற்றி மிகப்பெரிய சாதனையாகும் என்றார் அவர்.


நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: வைகோ

மே 24, 2008

நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னையில் வைகோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழ விடுதலைப் புலிகளின் முதல் வரிசைத் தளகர்த்தர்களுள் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஒருகணம் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் என் உள்ளம் உறைந்தது.

மாவீரர் பால்ராஜ் என்ற பெயரை உச்சரித்தாலே களத்தில் நிற்கும் வேங்கைகளின் நரம்புகளில் மின்சாரம் பாயும்.

பால்ராஜின் ஒரு கட்டளை முழக்கம் கேட்டால் போதும், பகைவர் படை அணி பல மடங்கு இருப்பினும், சரம் சரமாகக் குண்டுகள் சீறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு எதிரிகள் முகாமைச் சின்னாபின்னம் ஆக்குவர் விடுதலைப் புலிகள்.

பெரும் தொகை கொண்ட சிங்கள இராணுவத்தினரை, குறைந்த எண்ணிக்கை உள்ள வேங்கைகளைக்கொண்டு பலமாகத் தாக்கி வீழ்த்தி பலமுறை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரத்திலகம்தான் பிரிகேடியர் பால்ராஜ்.

1989 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 23 ஆம் நாள், இயக்கத்தின் முன்னணித் தளபதிகளை என்னிடம் விடுதலை வேங்கைகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்த போது, அவர்களுள் முக்கியமானவர் பிரிகேடியர் பால்ராஜ்.

குத்திக்கிழிக்கும் கூரிய முள்மரங்கள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கையில், எந்த நேரத்திலும் இருநாட்டு இராணுவமும் தாக்குகின்ற அபாயத்தின் ஊடே என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகத் தேர்ந்து எடுத்து உடன் அனுப்பி வைத்த வீரர்களில் சிலர் அதன்பின் நடைபெற்ற சமர்களில் வீரமரணம் எய்தினர்.

முக்கிய தளபதிகள் பல சமர்களில் சாகச வெற்றிகளைக் குவித்து உள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து வன்னிக்காடுகள் ஊடே நடக்கையில் கிளிநொச்சிக்குச் செல்லும் சாலையை நாங்கள் கடக்க நேர்கையில், இராணுவத்தினர் அந்த வழி வருவதை அறிந்து, அருகில் காட்டுக்கு உள்ளே நாங்கள் பதுங்க நேர்ந்தது. அப்பொழுது பல மணி நேரம் பால்ராஜ் அவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய உடலில் குண்டுகள் பாயாத இடமே இல்லை. பலமுறை படுகாயமுற்று, அதில் இருந்து மீண்டு, களங்களில் படை நடத்தி உள்ளார். ஒவ்வாரு சண்டையிலும் அவருக்கு நேர்ந்த மயிர்க்கூச்செரியும் அனுபவங்களை அவர் சொல்லக்கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். என் பாதுகாப்புக்காக உடன் வந்த புலிப்படைத் தம்பிகள், தளபதி பால்ராஜ் மீது கொண்டு இருக்கிற பாசம் மிக்க விசுவாசத்தையும், மதிப்பையும், அவர்கள் சொல்லச்சொல்லக் கேட்டுப் பிரமித்துப் போனேன்.

25 ஆம் நாள் இரவு 10:00 மணியளவில், பேசாலை பகுதியில், கடற்கரை மணலில் என்னைப் படகில் ஏற்றி விடை கொடுத்து அனுப்புவதற்கு முன்பு, பால்ராஜ் அவர்களைக் கட்டித்தழுவிக் கொண்டேன். அவரது காலணிகள் கிழிந்து போயிருந்ததால், என்னுடைய புதிய காலணிகளை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று கொடுத்தேன். அந்த இரவில் தொடுவாய் கடற்கரையில் நாங்கள் இறங்கத்திட்டமிட்டு இருந்ததால், மறுநாள் காலையில் 900-க்கும் அதிகமான இராணுவத்தினைர் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தப்போவதும், சீறிப்பாய்ந்த குண்டுமழையில், நூலிழையில் நான் உயிர் தப்புவேன் என்பதும், என்னுடன் வந்த வீரத்தம்பி சரத் என்ற பீட்டர் கென்னடி, உடல் சல்லடைக்கண்களாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுவான் என்பதையும் நான் கற்பனைகூடச் செய்யாத சூழலில் பால்ராஜிடம் இருந்து விடைபெற்றேன்.

அதன் பின்னர், கடந்த 19 ஆண்டுகளில், ஈழத்துப் பிள்ளைகளிடம் தொலைபேசியிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் பேச நேரும்போதெல்லாம் பால்ராஜ் அவர்களைப் பற்றி விசாரிப்பேன். நலமாக இருக்கிறார். போர்க்களங்களில் சாதிக்கிறார் என்றே சொல்லி வந்தார்கள். ஆனால், அண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதை அறிந்ததால், அண்மையில் நான் நோர்வே சென்றபோது, பால்ராஜ் அவர்களைப் பற்றி வினவினேன். “நலமாக இருக்கிறார்” என்றே சொன்னார்கள்.

நிகரற்ற அந்த ரணகளச் சூரன் மறைந்துவிட்டார். எந்தத் தாயக மண்ணின் விடுதலைக்காகப் போர்க்களத்தில் எதிரிகளைக் கதிகலங்கச் செய்தாரோ, அந்த மண்ணில், இதோ, அமைதியாக உறங்குகிறார். அவரது வீரமும், தியாகமும், தமிழ் ஈழ விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டன.

இம் மாவீரர்கள் துயில்கின்ற தமிழ் ஈழ மண் விடுதலை பெற்று, சுதந்திர இறைமை உள்ள நாடாக மலரும்போது, அந்த மண்ணிலே உறங்குகிற பால்ராஜின் உடலும் சிலிர்க்கத்தான் செய்யும்.

வாழ்க, மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் புகழ் என்று என் மனம் மானசீகமான முழங்கும் வேளையில் அம்மாவீரனின் கல்லறைக்கு, தாய்த்தமிழகத்தில் இருந்து என் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.


வாழும் உதாரணமாக செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்

மே 24, 2008

தமிழீழத் தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக “வாழும் உதாரணமாக” செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:

பிரிகேடியர் பால்ராஜ் எங்களில் இருந்து பிரியமாட்டார். தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் மறைய மாட்டார்.

அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் வரலாறானது ஒரு சுதந்திரப் போராட்ட வரலாறாக மாறி தமிழர்களின் போரியல் வரலாறாக மாற்றம் பெற்ற போது அதன் நாயகனாக வாழ்ந்தவர் பால்ராஜ்.

போரின் நாயகனாக போர்க்களத்தின் மத்தியில் நின்று வழிநடத்திய வீரத் தளபதியாக வாழ்ந்தார்.

எம்மை ஆக்கிரமித்தவர்களுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய தளபதி பிரிகேடியர் பால்ராஜை, எதிரிகளால் கடைசி வரை வீழ்த்திவிட முடியவில்லை.

கொடிய நோய் அவரை எம்மிடம் இருந்து பிரித்து வைத்து விட்ட போதிலும் அவரின் வரலாறு அவர் சாதித்த போர் தொடர்பான சாதனைகள் என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும். அது தமிழர்களின் வீர விடுதலைக்கான சுதந்திரப் போர் இயக்கமாக எம்மை வழிநடத்தும்.

தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்ததாக புதிதாக எழுதப் புறப்பட்ட காலத்தில் மிக முக்கிய நாயகனாக பால்ராஜ் விளங்கினார்.

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக-

போர்க்களத்தில் தமது தளபதி எவ்வாறு படைகளை வழிநடத்த வேண்டும் என்ற தேசியத் தலைவரின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகச்சிறந்த “வாழும் உதாரணமாக” செயற்பட்டவர் அவர்.

போர்க்களங்களில் துணிவுடனும் திறனுடனும் பதறாமலும் நின்று போர் விசாரணைகளை வழி நடத்தும் பண்பு அவருக்கே உரிய பண்பாக- அதுவும் இயல்பான ஒன்றாக- இயற்கையில் வாய்த்ததாக- அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்தினருடனான எத்தனையோ தாக்குதல்களில் திடீர் முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார்.

மிக இளம் வயதில் அவர் கிராமப்புறம் சார்ந்த வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் கிராம வாழ்கை அவருக்கு பிடித்திருந்தது.

ஆனால் அந்த கிராம வாழ்வுக்குள்ளும் மக்களை வழி நடத்துவதற்கான சிந்தனை அவருக்குள் இருந்தது.

படைப் பயிற்சிகளில் உளவியல் ஆசானாக இராணுவத் தலைமைத்துவனாக வெளிக்காட்டியவர்.

தமிழ் மக்களினதும் போராளிகளினதும் மன உறுதியை வளர்ப்பதில் சிறந்து விளங்கியவர் பால்ராஜ்.

பால்ராஜ் நோயினால் வீழ்ந்தது மனதைப் பிழியும் விடயம்.

அதேவேளை எதிரியால் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதும் எந்தவேளையிலும் எதிரியிடம் அவர் வீழந்துவிடவில்லை என்பதும் நாம் பெருமைப்படும் விடயம்.

ஆனால் அவர் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான போர்க்கள தளபதியாக இல்லாது வீழ்ந்து விட தாயாராக உள்ள போர்க்கள தளபதியாக செயற்பட்டார். பல்வேறு தாக்குதல்களில் பாரிய விழுப்புண்களை ஏந்தினார்

பால்ராஜ் வரலாற்றை படைத்தவர். வரலாற்றுக்கான சமர்களை வழிநடத்தி வென்றவர். அதற்காக குருதி கொடுத்து போர்க்களத்தில் நின்று சுழன்று போராடி வழிநடத்தியவர்.

சாவுக்குள்ளும் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதையும் தமிழர்களுக்கான வீர விடுதலை வரலாற்றை தனது வாழ்வின் ஊடாக எப்படி நடத்தினார் என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வீர விடுதலை வரலாற்று நாயகனாக வாழ்ந்தார். அவரது சாவைப்பற்றி அல்ல அவரது வாழ்வைப்பற்றி பெருமை கொள்வோம். அவரது வாழ்வு தமிழர்களின் விடுதலை வரலாற்றுக்கான இன்றியமையாத அத்தியாயமாக பதிந்து விட்டது என்பது பெருமை என்றார் அவர்.


Hello world!

மே 24, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!


Follow

Get every new post delivered to your Inbox.